சும்மா இருப்பதே சுகம்!

376

-ராஜ்மோகன்

கொரோனா எனும் இந்த புயல்வேக தோற்று நோய் ஏனைய நாடுகளில் பரவுவதற்கும் இந்தியாவில் பரவுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கத்தை அனுமதிப்பதும் மறுப்பதும் மக்களின் செயல்பாட்டில்தான் இருக்கிறது.

ஒரு தொற்று ஒரு இடத்தில் ஊடுருவுவது என்பது இயற்கையாக அந்த தொற்று வளர அல்லது பரவ இடமளிப்பது. இன்னொன்று நமது அலட்சியத்தினால் அதனை வரவழைத்துக்கொள்வது.

சரி, தமிழ்நாட்டில் இந்த தொற்று தாக்குபிடிக்குமா?

நாம் மேலைநாட்டினர் போன்று எதற்கெடுத்தாலும் ‘ஹைஜீனிக்’ என்று சொல்லிக்கொண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துகொண்டவர்கள் இல்லை. மிக சாதாரணமக கையேந்தி பவனில் சாப்பிட்டு, தெருவோர் கடையில் டீ குடித்துக்கொண்டு, நடைபாதை தின்பண்டங்களைத் தின்றுகொண்டு திரிபவர்கள்.

நம்மில் எத்தனை பேர் காலை, மாலை இருவேளை குளிக்கிறோம். அட ! வீட்டிற்கு வெளியே சென்று வந்தால் முறையாக கை கால் கழுவுகிறோமா? இவையெல்லாம் தவறுகள்தான். ஆனால், இவற்றில் நமக்குத் தெரியாமல் நன்மை ஒளிந்திருக்கிறது. இப்படி அலட்சியமாக இருக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தொற்று நம்மை தாக்கிகொண்டேதான் இருந்திருக்கும். அப்போது எல்லாம் நம்மில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வெளிப்பட்டு நமக்கு அரணாக மாறியிருக்கும்; இப்படி நம் மக்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயல்பிலேயே அதிகம்.

அடுத்து புறத்தில் ஏராளமான மூலிகை மரங்களை கொண்டது தமிழ்நாடு. குறிப்பாக வேம்பு, புங்கை போன்ற கிருமிநாசினி மரங்கள். இப்பொழுது அவை குறைந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், எஞ்சிய மரங்கள் இன்னும் செயலாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. வேம்பையும் மஞ்சளையும் அதிகம் பயன்படுத்துவது நாம்தான். இஞ்சி டீ அதிகம் அருந்துவதும் நாம்தான்.

இப்படி புறவுலக சூழல் நமக்கு சாதகமாகவே இருக்கிறது; இதையெல்லாம் மீறி கொரோனா நம் ஊரில் பரவுகிறது என்றால் அதற்குக் காரணம் நம் அலட்சியம்.

அலட்சியப்படுத்தாதீர்கள்… பாதுகாப்பான இடைவெளியை கடைபிடியுங்கள். அதுதான் தொற்றுள்ளவர்களிடம் இருந்து நாம் விலகி இருக்க ஒரே வாய்ப்பு.

தொற்றுள்ளவர்கள் யார்?

இப்போதைக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் மட்டுமே. எனவே, நீங்கள் ஆற அமர அமர்ந்து இந்த ஒருமாத காலத்தில் அப்படிப்பட்ட யாரையாவது சந்தித்து பேசி கை குலுக்கியிருக்கிறீர்களா என யோசியுங்கள். இல்லையெனில் கொரோனா பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இனி வெளிப்படுமா என்றால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். அதை கண்டுபிடிக்கத்தான் இந்திய அரசின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு. இந்த இருபத்தியொரு நாட்கள் சும்மா வீட்டில் அடைந்து இருங்கள்.

வீட்டிலும் குறைந்தபட்சம் மூன்று அடி இடைவெளியில் நின்று பேசுவதும் இயங்குவதும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பை உறுதிபடுத்தும்.

வீட்டில் அடைந்துகிடக்கும்போது மனதை அமைதிபடுத்துகொள்ள ஒரே வழி தேவையற்றவற்றை பார்ப்பதும் படிப்பதும் கேட்பதும். நமது சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள மஞ்சள், வேம்பு, திரிபாலா கலந்த நீரைகொண்டு கைகால்களை அடிக்கடி கழுவுங்கள். உணவில் இஞ்சி, பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இஞ்சியை சாறு ஆக்கி அதில் கொஞ்சம் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது கொரோனாவை எதிர்த்து போராட நமக்கு உதவலாம்.

எல்லாவற்றையும்விட முக்கியம் சும்மா இருப்பது. என்னது சும்மா இருப்பதா என்று வடிவேலு மாதிரியெல்லாம் கேட்கவேண்டாம். கொரோனாவை பொறுத்த மட்டில் சும்மா இருந்தால்தான் சுகம்!

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நமது எண்ணத்தின் ஆற்றலை அதிகரிக்கவும் முன்பெல்லாம் ஞானிகள் மௌன நோன்பு இருப்பார்களாம். அதாவது, பேசாமல், அங்கு இங்கு வெளியே செல்லாமல், அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நம் மனதை கவனிப்பது.

மேளனத்தால் கொரனோவை தடுக்கமுடியுமா?

நிச்சயம் முடியும். ஏனெனில், இயல்பிலேயே ஒரு சமுக விலகல் இங்கு நிகழ்கிறது. இதில் 50 சதவிகிதம் வாய்ப்பு குறைந்துவிடும். மௌனமாக இருக்கும் போது முழுக்க முழுக்க நமது எண்ணங்கள் வலுப்படும். நாம் பேசுவதின் மூலமும் கேட்பதின் மூலமும் வீணாக்கும் சக்தி முழுவதும் மனதின் கண் செயல்படும். அதாவது எண்ணத்தின் மீது வலுப்பெறும். ஆரம்பத்தில் குழப்பமான எண்ணங்கள் எழுந்தாலும் இரண்டொரு நாட்களில் அவை கரைந்து தேவையான எண்ணங்கள் மட்டுமே மனதில் நிற்கும்.

எண்ணம் வலிமையடையும் போது உடல் தானே வலிமையடையும். எண்ணத்தின் ஆற்றலினால் எதையும் சாதிக்க முடியும்.

நீங்கள் வரும் காலத்தில் விரும்பியதை சாதிக்க இந்த 21 நாள் சமூக விலகலை பயன்படுத்திகொள்ளுங்கள். கொரோனாவை வெல்வதுடன் நம் உடலின் வலிமையையும் மனதின் வலிமையையும் மேம்படுத்திகொள்ள முடியும்.

கைப்பேசி, மடிக்கணினி, தொலைக்காட்சியை ஒதுக்கிவிட்டு சும்மா அப்படி போய் உட்காருங்கள். உங்களுக்குள் ஒரு பேராற்றல் மிக்க மனிதனை நீங்கள் அடையாளம் காண முடியும். அதற்கு 21 நாட்கள் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here