இலவசக் கல்வி

291

-சுந்தரபுத்தன்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி இலவசமாகப் படிக்க ஆறாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்தவர்கள், ஒற்றைப் பெற்றோர் உள்ளவர்கள், கணவனால் கைவிடப் பட்டவர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 115 ஆண்டுகளாக ராமகிருஷ்ண மிஷன் கல்விச் சேவையில் ஈடுபட்டுவருகிறது.

கல்வித்தகுதி

ஆண் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்வழிக்கல்வியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து ராமகிருஷ்ண மிஷன் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடரலாம். இங்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், கல்விக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்புத் தேறியவர்கள் முதலாண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். பன்னிரெண்டாம் வகுப்பு தேறியவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை

தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பபப்படிவத்தை நேரிலோ அல்லது 10 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் ஆணையுடன் சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்பிப் பெறலாம். அஞ்சல் உறையின் மேல் ஆறாம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக் படிப்பு எனக் குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பத்துடன் பெற்றோரை இழந்தவர், ஒற்றைப் பெற்றோர் மட்டும் உள்ளவர், கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதழ்கள் மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருமானச் சான்றிதழை இணைத்து அனுப்பவேண்டும். விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு செய்த பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெறும். பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளியான பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களைப் பெற முகவரி: ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளி, எண். 66, பி.எஸ். சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை – 6000 004.
விண்ணப்பம் பெற்றுக்கொள்ள கடைசி தேதி: 30.4.2020

ஆறாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 13.5.2020

விவரங்களுக்கு: 044 2499 0264 / 4210 7550 / 9444831696 / 8012348988

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here