-மோ. கணேசன்
சென்னை ஆவடியிலுள்ள மத்திய அரசின் படைக்கலத் தொழிலகப் பயிலகத்தில், பாதுகாப்புத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு துறை சார் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதன்முறையாக பல்வேறு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து அங்குள்ள அலுவலரிடம் பேசியபோது…
இந்தியா முழுவதும் பாதுகாப்புத் துறையினர், இங்கே பல்வேறு பயிற்சிப் படிப்புகளில் சேர்ந்து கல்வித் தகுதியையும், தொழில்நுட்பத்தகுதியையும் உயர்த்திக்கொள்கிறார்கள். இந்த ஆண்டு முதல்முறையாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கும் குறைந்தகால சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம்.
மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் சுயமாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கும் ஏற்றவாறு சான்றிதழ் படிப்புகளை நடத்த இருக்கிறோம்.
என்னென்ன படிப்புகள்?
PHP – MYSQL, MS Office, Cyber Security, C, C++, குவாலிட்டி கண்ட்ரோல், குவாலிட்டி அஸ்யூரன்ஸ், இன்டர்னல் குவாலிட்டி ஆடிட், QMS, OHSMS, EMS, IMS, சோலார் எனர்ஜி டெக்னாலஜி, சென்ட்ரல் பப்ளிக் புரோகியூர்மென்ட் பெர்சனல் அட்மினிஸ்ட்ரேஷன் ஃபார் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட்ஸ், பார்லிமென்ட்ரி அபீஷியல் லாங்வேஜ் கொஸ்டினர்.
சென்னை ஐஐடி, பிஐஎஸ்-சென்னை, பேடன்ட் ஆபிஸ்-சென்னை, நேஷனல் இன்பர்மேட்டிக்ஸ் சென்டர் உள்பட திறன்வாய்ந்த கல்வி நிறு வனங்களில் இருந்து ஆசிரியர்களை அழைத்து, இந்த சான்றிதழ் படிப்புகளை நடத்துகிறோம்.
மொத்தம் 5 நாள் பயிற்சியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இங்கே தினமும் படித்துவிட்டுப் போகலாம். வெளியூர் எனில் விடுதி வசதியும் உண்டு.
பணியில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற திறன் வளர்ப்பு பயிற்சிகளுக்கு அதிக நாள் விடுமுறை கிடைக்காது அதனால் 5 நாட்களில் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
5 நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.2000. ஒவ்வொரு படிப்பிலும் 25 பேர் சேர்ந்துவிட்டால், உடனே அந்த குழுவினருக்கு பயிற்சிப் படிப்பைத் தொடங்கிவிடுவோம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்பபடையில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
மின்னஞ்சல் மூலம் என்ன சான்றிதழ் படிக்கப்போகிறீர்கள் என்பதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தொலைபேசி மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: ofilav@nic.in
தொடர்புக்கு: 044-26843364, 26843360, 9494983936
விவரங்களுக்கு: https://ofbindia.gov.in/units