வேலை நமதே

20

-சுந்தரபுத்தன்

நிலக்கரி நிறுவனத்தில் எழுத்தர்

கொல்கத்தாவில் உள்ள ஆபீஸ் ஆஃப் த கோல் கன்ட்ரோலர் நிறுவனத்தில் காலியாக உள்ள எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்ட உதவியாளர், சீனியர் இன்வெஸ்டிகேட்டர், எழுத்தர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அஞ்சல்வழியில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: SHRI SADANANDA
MUKHERJEE, DY ASST. COAL CONTROLLER,
OFFICE OF THE COAL CONTROLLER, 1,
COUNCIL HOUSE STREET, KOLKOTTA – 700 001.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.4.2020
விவரங்களுக்கு: www.coalcontroller.gov.in

அருங்காட்சியகத்தில் நூலகர் பணி

நியூடெல்லியில் உள்ள நேஷனல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலகக் கண்காணிப்பாளர், நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் ஆகிய பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
THE DIRECTOR, NATIONAL MUSEUM OF NATURAL
HISTORY, 4TH FLOOR, BLOCK NO. 3, CGO COMPLEX,
LODHI ROAD, NEW DELHI – 110003
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 25.5.2020
விவரங்களுக்கு: www.moef.nic.in

தேசிய பழங்குடியினர் கல்விக்கழகத்தில் வேலை

மத்திய பழங்குடியினர் நலத்துறையின்கீழ் நியூடெல்லியில் இயங்கும் தேசிய பழங்குடி மாணவர்களுக்கான கல்விக் கழகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மானிட்டரிங், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், நிதித்துறை, தேர்வு உள்ளிட்ட துறைகளில் ஆலோசகர் மற்றும் டேட்டா மேலாளர் பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.4.2020
விவரங்களுக்கு: https://tribal.nic.in

இஸ்ரோவில் சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிகள்

அஹமதாபாத் நகரில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் என்ஜினீயர் உள்பட 21 வகையான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலெக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், ஸ்ட்ரக்சுரல், எலெக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் சயின்டிஸ்ட் என்ஜினீயர், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், டெக்னீசியன் ஆகிய 21 வகையான பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 3.4.2020
விவரங்களுக்கு: www.sac.gov.in

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மும்பையில் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருத்துவ, அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவ, அறிவியல் அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேவையான சான்று ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.4.2020
விவரங்களுக்கு: https://recruit.barc.gov.in

NALCO நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்

நேஷனல் அலுமினியம் கம்பெனி எனப்படும் தேசிய நிறுவனத்தில் காலியாக உள்ள கிராஜூவேட் என்ஜினீயர் பணிகளுக்கு கேட் 2020 தேர்வின் மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெட்டலார்ஜி, சிவில், மைனிங், கெமிக்கல் போன்ற பிரிவுகளில் கிராஜூவேட் என்ஜினீயர் பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 9.4.2020
விவரங்களுக்கு: https://nalcoindia.com

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் பணி

பாமர் அண்ட் லாரி லிமிடெட் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.

தலைமை தகவல் அதிகாரி, உதவி மேலாளர், மார்க்கெட்டிங் ஹெட் போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, பணி அனுபவம், தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 6.4.2020
விவரங்களுக்கு: www.balmerlawrie.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here