நாளந்தா பல்கலையில் முதுநிலைப் படிப்புகள்

226

-சுந்தரபுத்தன்

எம்பிஏ, பிஎச்டி மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்

பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள ராஜகிரி மலையில் அமைந்துள்ள வரலாற்றுப் பெருமைமிக்க நாளந்தா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பின் சிறப்பு

மத்திய வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சர்வதேச கற்றல் சூழலைப் பெறுவார்கள். ஏனெனில் இங்கு 60 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். சர்வதேச மற்றும் ஆசிய கண்ணோட்டத்தில் வடிவமைக்கப்பட்ட படிப்புகள் உள்ளன.
சஸ்டனைபிள் டெவலப்மெண்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் பாடத்தில் எம்பிஏ, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள், புத்திஸ்ட் ஸ்டடிஸ், பிளாசபி அண்ட் கம்பேரட்டிவ் ரிலீஜன், வரலாற்று ஆய்வுகள் ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் மற்றும் சமஸ்கிருதம், ஆங்கிலம், பாலி, திபெத்தியன் மற்றும் கொரியன் மொழிகளில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

ஹியூமானிட்டிஸ், சயின்சஸ், பொறியியல், மேலாண்மை, சட்டம் தொடர்பான படிப்புகளில் சேர ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 55 சதவீதம் மதிப்பெண்கள் அவசியம்.

எம்பிஏ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் CAT, XAT, MAT தேர்வுகளில் 70 பர்சன்டைல் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். ஐந்து ஆண்டு பணி அனுபவமுள்ளவர்களும் எம்பிஏ படிப்பில் சேரலாம். முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர ஏதாவது ஒரு மொழியில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். ஆங்கில மொழித் திறன் அவசியம்.

பிஎச்டி படிப்பில் சேர முதுநிலை படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்கவேண்டும். நான்கு ஆண்டு படிப்பு. முழுநேரம் மற்றும் பகுதிநேரமாகப் படிக்கலாம். இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஸ்டேட்மெண்ட் ஆஃப் பர்ப்பஸ், சுயவிவரக் குறிப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து admissions2020@nalandauniv.edu.in என்ற ஆன்லைன் முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. நாளந்தா பல்கலையின் ஹெச்டிஎப்சி வங்கிக்கணக்கில் ஆர்டிஜி, நிப்ட் முறையில் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020
விவரங்களுக்கு: www.nalandauniv.edu.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here