சென்னையில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம்

108

-சுந்தரபுத்தன்

தமிழ்ப் பண்பாடு பற்றிய சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தவுள்ளது. இந்தக் கருத்தரங்கில் உலகளாவிய நிலையிலுள்ள அனைத்து தமிழர்களும் ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பங்களிப்புச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் ஜூன் 2வது வாரதத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் அனைத்து பரிமாணங்கள் குறித்தும் உலகளாவிய நிலையில் மிக விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுரை தலைப்புகள்

தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையுள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களையும், தற்கால தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும், அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் மிக ஆழமாகவும் தக்க சான்றுகளுடனும் விவாதிக்கும் நோக்கில் பல தலைப்புகளை மையப்படுத்தி கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பழக்க வழக்கங்கள்/நம்பிக்கைகள்/சடங்குகள்/விழாக்கள்/வழிபாடுகள், உணவு மரபுகள்/வணிகம்/தொழில்கள்/ஆடை, ஆபரணங்கள், கட்டடக் கலை/சிற்பக்கலை/இசைக்கலை/நாடகக் கலை, கூத்துக் கலை, ஆவணக் கலை/நாணயங்கள், வாய்மொழி இலக்கியங்கள்/புழங்குபொருள்கள்/பழங்குடி மக்கள் வாழ்வியல், தமிழ் மருத்துவம், சமூக, அரசியல், சமய நிலைகள்/குடும்ப வாழ்வு, கல்வி, வீரம், கொடை, விளையாட்டு, புலவர் பண்பாடு போன்ற தலைப்புகளில் எழுதலாம்.

மேலும், தமிழகத்திற்கு அப்பால் இந்திய அளவிலும் உலக அளவிலும் பரவியுள்ள தமிழர்களின் வாழ்வியலும் பண்பாடும், தற்போதைய உலகமயமாதல் சூழலும் தமிழ்ப் பண்பாடும், உலகளாவிய நிலையில் செயல்படும் தமிழ்ப் பண்பாடு தொடர்பான அமைப்புகளும் அவர்களின் பங்களிப்புகளும் உள்ளிட்ட தலைப்புகளிலும் இவை தொடர்பான பிற தலைப்புகளிலும் கட்டுரைகள் அமையலாம்.

அனைத்து துறைசார்ந்த பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், பல்துறைசார்ந்த மாணவ மாணவியர்கள், படைப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் அனுப்புவது எப்படி?

ஆய்வுக் கட்டுரைகள் பேராளர்களின் சொந்த முயற்சியில் உருவானதாக இருக்க வேண்டும். ஆய்வு மாணவர்கள் தங்கள் நெறியாளர் அல்லது துறைத் தலைவர்களின் பரிந்துரையுடன் கட்டுரைகளை அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக்கட்டுரைகளை ஏ4 தாளில் 1.5 இடைவெளியுடன் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் (800 சொற்கள்) பாமினி எழுத்துருவில், தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கணினிவழி தட்டச்சு செய்து பதிவுப்படிவம், ஆய்வுக்கட்டுரை, வங்கியில் பணம் செலுத்தியமைக்கான செலுத்துச்சீட்டு ஆகியவற்றை tamilresearchsotcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகள் ஐஎஸ்பிஎன் எண்ணுடன் ஆய்வுக்கோவைகளாக அச்சிடப்பட்டு, பேராளர்களுக்கு வழங்கப்படும். கட்டுரைகள் அனைத்தும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கட்டுரைத் தலைப்பு, ஆய்வுச் சுருக்கும், குறிச்சொற்கள், முன்னுரை, முடிவுரை, துணைத் தலைப்புகள், துணைநூற் பட்டியல் ஆகியன கட்டுரையில் கட்டாயம் இடம்பெற வேண்டும். கட்டுரைகளைச் சுருக்கவோ, திருத்தம் செய்யவோ பதிப்புக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

கருத்தரங்கில் நேரில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க இயலாதவர்களும் தங்கள் கட்டுரைகளை உரிய கட்டணத்துடன் அனுப்பலாம். அவர்களுக்கு ஆய்வுக் கோவை அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவு தனி. பதிவுப் படிவம், கட்டணம் செலுத்தியமைக்கான சான்று, ஆய்வுக்கட்டுரை ஆகிய அனைத்தையும் அனுப்பவேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை பேராளர் கட்டணம் / பேராசிரியர்கள் /ஆய்வாளர்கள்: ரூ.750. பங்கேற்பாளர் ரூ. 350. வெளிநாட்டவர்: 50 யுஎஸ் டாலர் . ஆன் லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம். சைதாப் பேட்டை இந்தியன் வங்கிக் கிளையில் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் கணக்கில் ( 6083527527) செலுத்தலாம்.

இணையம் வழி பணம் செலுத்த இயலாதவர்கள் Head, School of Tamil and Cultural Studies, Tamilnadu Open University என்னும் பெயருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி வரைவோலை எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். கடைசி நாளுக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தொடர்பு முகவரி:
பேராசிரியர் – தலைவர்,
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 15.
தொடர்பு எண்கள்: 044-24306626 / 94446 03124 / 9894621706
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30. 4. 2020
விவரங்களுக்கு: tamilresearchsotcs@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here