பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

420

-மோ. கணேசன்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு

கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் சமையல் எரிவாயு தேவைகளை நிறைவேற்றிவரும் மிகப்பெரிய நிறுவனம்தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். இங்கு காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர்களுக்கான பணிகள் மற்றும் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

இந்தியா முழுவதும் உள்ள ஐஓசிஎல் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் பொறியாளராகவும், அதிகாரியாகவும் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பொறியியல் பட்டப்படிப்புகளில் தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவினர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தோர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 2020 ஜூன் 30 ஆம் தேதியன்று, பொதுப்பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் 26 வயதுக்குள் இருக்கவேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வுமுறை

இப் பணிகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கேட் 2020 தேர்வினை எழுதியிருக்க வேண்டும். கேட் – 2019 தேர்வு மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணிகளுக்குத் தேர்வுசெய்யப்படுவோர் நாட்டின் எந்த இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்கவேண்டும். மேலும் வெளிநாடுகளில் பணியாற்றவும் தயாராக இருக்கவேண்டும். ரிபைனரி டிவிஷன், மார்க்கெட்டிங் டிவிஷன், பைப் லைன் டிவிஷன், பிஸினஸ் டெவலப்மெண்ட் எனப் பல்வேறு பிரிவுகளில் தகுதியானவர்கள் பணிகளில் அமர்த்தப்படுவர். பயிற்சிப் பணிகளிலும் சிலர் நியமிக்கப்படுவார்கள்.

ஆரம்பத்தில் அடிப்படை ஊதியமாக மாதந்தோறும் ரூ. 50 ஆயிரம் மற்றும் சில படிகளும் வழங்கப்படும். பணியாளரின் திறமை அடிப்படையில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 15.10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதுபற்றிய முழுமையான தகவல்கள் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 6.5.2020

விவரங்களுக்கு: www.iocl.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here