தியேட்டர் ஆர்ட்ஸ் டிப்ளமோ

334

-சுந்தரபுத்தன்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் குறைந்த கட்டணத்தில் படிக்க மே மாதம் அறிவிப்பு வெளியாகும்
சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் மீடியா ஆர்ட்ஸ் (ஊடகக் கலை), தியேட்டர் ஆர்ட்ஸ் (அரங்கக்கலை) ஆகிய ஓர் ஆண்டு பட்டயப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு மே மாதம் வெளியாகும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முழுநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்ததும், இங்கே சேர்ந்து படிக்கும் வாய்ப்பிருக்கிறது.

படிப்பின் சிறப்பு

மாணவர்கள் ஊடகத் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றிட வசதியாக மக்கள் தகவல்தொடர்பு அறிமுகமும், இதழியல், வானொலி, தொலைக்காட்சிக் கலை, திரைப்படக் கலை, மொழித்திறன்: ஊடகங்களுக்கு எழுதுதல் ஆகிய ஐந்து பாடங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுதல், ஊடகங்களுக்கு எழுதும் நுட்பங்கள் விரிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஊடகக்கலை படிப்பில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் துறைசார்ந்த ஐந்து நூல்கள் வழங்கப்படும். ஊடகங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஏற்கெனவே இத்துறையில் பணியாற்றிவருபவர்களுக்கும் இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

அரங்கக்கலை படிப்பில் அரங்கு, உடல்மொழி, அரங்க மொழிகள், நாடகப் படைப்பாக்கம், நாடகம் படைத்தளித்தல் பயிற்சி ஆகிய ஐந்து பாடங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் சிறந்த நாடகப் பேராசிரியர்களைக் கொண்டு பாடநூல்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. பாடநூல்கள் படிப்புக் கட்டணத்திற்குள்ளாகவே வழங்கப்படும். மாணவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே நாடகம் படைத்தளித்தல் செய்முறைத் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்படும்.

கல்வித்தகுதி

பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அடிப்படை கல்வித்தகுதி இல்லாதவர்கள் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் இளநிலை ஆயத்தப் படிப்பில் (TNOU-BPP) தேர்ச்சி பெறவேண்டும். கடந்த ஆண்டு படிப்புக் கட்டணம் ரூ.1980 மட்டுமே. நடப்பு ஆண்டில் சற்று மாறுபடலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100 என்ற அளவிலேயே இருக்கும். ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் அல்லது நேரில் விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டணத்தை பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் என்ற முகவரியில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்ட் இணைக்கவேண்டும்.

முகவரி: தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை,
சைதாப்பேட்டை, சென்னை – 600 015. தொலைபேசி: 044– 2430 6600.
விவரங்களுக்கு: www.tnou.ac.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here