இக்னோவில் எம்பிஏ!

243

-சுந்தரபுத்தன்

ஜூலையில் தொடங்கும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேரலாம்

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் என 220 பாடப்பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. வேலையில் இருப்பவர்கள், பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாதவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து பயன்பெறக்கூடிய நிலையில், தொலைநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலை, முதுநிலை

உளவியல், ஆங்கிலம், பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், ரூரல் டெவலப்மெண்ட், சமூகவியல், தத்துவம், வரலாறு, ஹிந்தி, மொழிபெயர்ப்பு, மானுடவியல், தொலைநிலைக்கல்வி, டெவலப்மெண்ட் ஸ்டடிஸ், முதியோர் கல்வி போன்ற பாடப் பிரிவுகளில் எம்ஏ படிப்புகளுக்கும், எம்சிஏ, எம்காம், எம்எஸ்சி டயடிடிக்ஸ் அண்ட் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், கவுன்சலிங் அண்ட் பேமலி தெரபி போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூனில் வெளியாகும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பிஎஸ்சி படிப்புகள், உளவியல், ஆங்கிலம், வணிகவியல், ஹிந்தி, சமூகவியல், வரலாறு, பப்ளிக் அட்மின்ஸ்ட்ரேஷன், சமூக அறிவியல், தத்துவம், உருது போன்ற பாடப்பிரிவுகளில் பிஏ படிப்புகள், பி.காம், பிசிஏ, பிஎல்ஐஎஸ், பிஎஸ்டபிள்யூ போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ் வழியில் டிப்ளமோ முதுநிலை டிப்ளமோ மற்றும் டிப்ளமோ படிப்புகள் பற்றி இக்னோ இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். மழலைப்பருவ கவனிப்பு பற்றிய தமிழ்வழி டிப்ளமோ மற்றும் புட் அண்ட் நியூட்ரிஷன் பற்றிய சான்றிதழ் படிப்பும் தமிழ்வழியில் இருக்கிறது.

கல்வித்தகுதி

இளநிலைப் படிப்புகளில் சேர பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். முதுநிலைப் படிப்புகளுக்கு ஏதாவது ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். பிளஸ் டூ முடிக்காதவர்கள் பிபிபி எனப்படும் இக்னோவின் பேச்சிலர்ஸ் பிரிபரேட்டர் புரோகிராம் முடித்துவிட்டு இளநிலைப் படிப்பில் சேர அனுமதி பெறலாம்.

எம்பிஏ பேங்கிங் மற்றும் பைனான்ஸ் தொலைநிலைப் படிப்பில் சேர இளநிலைப் படிப்பை முடித்திருப்பதுடன் மும்பையின் இன்ஸ்டிட்யூட் ஆப் பேங்கிங் அண்ட் பைனான்ஸ் நடத்தும் சிஏஐஐபி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி மற்றும் பைனான்ஸ் சேவையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பத்தை இலவசமாக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பக்கட்டணம் உண்டு. இக்னோ மையங்களிலும் விண்ணப்பம் பெறலாம். ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தவேண்டும். அனைத்து படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு மட்டும் விண்ணப்பத்தை அஞ்சல் வழியில் அனுப்பவேண்டும்.

ஜூலையில் மாணவர் சேர்க்கை இக்னோவில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் இருமுறை சேர்க்கை நடைபெறும். தொலைநிலைக்கல்வி மூலம் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் தொடர்ந்து பரிசீலிக்கப்படும். தொலைநிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இக்னோவுக்கு நாடு முழுவதும் 56 வட்டார மையங்கள், 2900 கல்வி மையங்கள் செயல்படுகின்றன.

சென்னை முகவரி: இக்னோ வட்டார மையம், பெரியார் திடல், 84/1 ஈவெகி சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7 தொடர்புக்கு: 044-26618438 / 26618039

விவரங்களுக்கு: www.ignou.ac.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here