பொறியியல் துறையில் ஒருங்கிணைந்த பிஎச் டி படிப்பு

93

– மோ.கணேசன்

இந்திய மாணவர்கள் அறிவியல் மட்டுமல்லாது பொறியியல், மின்னியல், உயிரியல் என பல்வேறு அறிவியல் சார் துறைகளில் திறமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் AcSYR (Academy of Scientific and Innovative Research) எனும் அமைப்பு.

தலைமையகம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காஸியாபாத்திலும், துணை வளாகம் சென்னையில் உள்ள தரமணியிலும் அமைந்துள்ளது. இந்தியா முழுக்க உள்ள 44 விதமான சிஎஸ்ஐஆர் ஆய்வுக்கூடங்களில் பிஎச்டி ஆய்வுப் படிப்புகளையும், எம்எஸ்சி, எம்டெக் போன்ற முதுநிலைப் படிப்புகளையும், எம்டெக்-பிஎச்டி என்ற ஒருங்கிணைந்த ஆய்வுப் படிப்பையும் நடத்தி வருகிறது. தற்போது மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிஎச்டி என்ஜினீயரிங் பிரிவுகளில் படிக்க விரும்புவோர் சம்மந்தப்பட்ட துறைகளில் எம்.இ. அல்லது எம்.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஎஸ்ஐஆர்-யுஜிசி நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வு எழுதியிருப்பவர்கள், இன்ஸ்பையர் பெல்லோஷிப் பெற்றிருப்பவர்கள் ஆய்வுப் படிப்பில் சேர தகுதியானவர்கள்.
அறிவியல் துறைகளில் பிஎச்டி படிக்க விரும்புவோர் பிஇ, பிடெக், எம்பிபிஎஸ் ஆகியவற்றைப் படித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பாடப்பிரிவில் எம்எஸ்சி படித்திருக்க வேண்டும். யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி, கேட் தேர்வில் தேர்ச்சி, இன்ஸ்பயர் பெல்லோஷிப் பெற்றிருப்பவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

எம்டெக்-பிஎச்டி எனும் ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பில் சேர விரும்புவோர், பிஇ அல்லது பிடெக் அல்லது பிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி படித்து முடித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி, கேட் தேர்வில் தேர்ச்சி, இன்ஸ்பயர் பெல்லோஷிப் பெற்றிருப்பவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.

எம்டெக் படிப்பில் சேர விரும்புவோர், பிஇ அல்லது பிடெக் படித்து முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி படிப்பில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு அறிவியல் பிரிவில் பிஎஸ்சி, அக்ரிகல்ச்சர் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், பிஇ, பிடெக் ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்களுக்குப் பிடித்த துறையில், பிடித்த ஆய்வுக்கூடத்தில் தலைசிறந்த இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலோடு, அவர்களோடு இணைந்து ஆய்வு செய்யவும், ஆய்வுப்படிப்பை முடிக்கவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.விண்ணப்பிக்கும்போது, மூன்று சிஎஸ்ஐஆர் ஆய்வுக்கூடங்களை முன்னுரிமை கொடுத்து குறிப்பிட வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

படிப்புக்கட்டணம் குறைவு. மத்திய அரசின் கல்வி நிறுவனம். சிறந்த விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் போன்ற சாதகமான அம்சங்கள் மாணவர்களுக்கு இருப்பதால், அறிவியல், பொறியியல் துறையில் ஆய்வுப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 28.05.2020

விவரங்களுக்கு: http://acsir.emli.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here