பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஓவியப் போட்டி

498

-மோ.கணேசன்

தமிழக காவல் துறை நடத்துகிறது

குழந்தைகள் வீட்டில் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தமிழக காவல் துறை பள்ளி மாணவர்களுக்கென்று ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் தமிழ்நாடு காவல்துறை பிரிவு போட்டியை நடத்துகிறது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

நான்கு வயது முதல் 16 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
தலைப்பு என்ன?

வயதுக்கு ஏற்றாற்போல, இப்போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அதாவது 4 வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவர்கள் குரூப் ஏ பிரிவிலும், 11 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள் பி பிரிவிலும் போட்டியிடலாம்.

‘ஏ’ பிரிவு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியின் தலைப்பு: கொரோனா காலத்தில் எனது குடும்பம் (My family during Corona).

‘பி’ பிரிவு மாணவர்களுக்கு ஓவியப்போட்டியின் தலைப்பு: கொரோனா காலத்தில் எனது அன்றாட கதாநாயகர்கள் (Our everyday hero’s).

எதைக்கொண்டு வரைவது?

ஆன்லைன் ஓவியப்போட்டி என்பதால் பெயிண்ட், போட்டோஷாப் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. ஏ4 தாளில் மாணவர்கள் தங்களது வீட்டில் உள்ள வரைபொருட்களை வைத்து, வரைந்து வண்ணம் தீட்டவேண்டும்.
படம் வரைந்து முடித்த பின்பு, ஓவியத்தின் வலது மேற்புறம் மாணவரின் பெயர், வயது, பெற்றோரின் செல்போன் நம்பர், மாவட்டத்தின் பெயர் ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

எப்படி அனுப்ப வேண்டும்?

ஒரு மாணவர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். அதை அந்த மாணவர் வரைந்ததாக இருக்க வேண்டும். வரைந்த ஓவியத்தை நிழற்படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ tnpolice.artcontest@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பரிசுகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 20 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பரிசுகள் அவரவர் வீடு தேடி வந்து கொடுக்கப்படும்.

பரிசுக்குரிய ஓவியத் தேர்வு முறை மாணவர்களின் கற்பனைத் திறனுக்கும், வரைந்த ஓவியத்தின் நளினத்திற்கும், அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணக் கலவைகளுக்கும் ஏற்ப அனுபவம் மிக்க அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுக்குரிய ஓவியங்கள் தேர்வு செய்யப்படும்.

ஓவியங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 3.5.2020

சந்தேகங்களுக்கு: 7338854386, 9500087529

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here