ஜனவரியில் தொடங்கும் எம்பிஏ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்
இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் என 220 பாடப்பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. வேலையில் இருப்பவர்கள், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாதவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து பயன் பெறக் கூடிய நிலையில், தொலைநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
ஜனவரியில் தொடங்கும் பேங்கிங் மற்றும் பைனான்ஸ் பாடப்பிரிவில் எம்பிஏ தொலைநிலைப் படிப்பில் சேர இளநிலைப் படிப்பை முடித்திருப்பதுடன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் அண்ட் பைனான்ஸ் நடத்தும் ஏஐஐபி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி மற்றும் பைனான்ஸ் சேவைகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
இந்த இரண்டு ஆண்டு படிப்பை குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளில் முடிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000. இக்னோ மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் வழியாக பெற விரும்புவோர் 1050 ரூபாய்க்கான சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராஃப்ட் இணைத்துப் பெறலாம்.
ஹியூமன் ரிசோர்ஸ், நிதி மேலாண்மை, ஆபரேஷன்ஸ் மேலாண்மை, மார்க்கெட்டிங் மேலாண்மை, பைனான்சியல் மார்க்கெட்ஸ் பிராக்டிஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிக்க ஏதாவது பாடப்பிரிவில் (சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி, காஸ்ட் அக்கவுண்டன்சி, கம்பெனி செக்ரட்டரிஷிப் உள்ளிட்ட) 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 சதவீதம்.
இந்த ஓராண்டு படிப்பை மூன்று ஆண்டுகளில் முடிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செதுகொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை. இரண்டு வகையான படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
இக்னோவில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை இருமுறை சேர்க்கை நடைபெறும். தொலைநிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இக்னோவுக்கு நாடு முழுவதும் 56 வட்டார மையங்கள், 2900 கல்வி மையங்கள் செயல்படுகின்றன.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இக்னோ வட்டார மையம், பெரியார் திடல், 84/1 ஈவெகி சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7 தொடர்புக்கு: 044-26618438 / 26618039
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.1.2019
விவரங்களுக்கு: www.ignou.ac.in
– சுந்தரபுத்தன்