Now Reading
திராவிடப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக எம்.ஏ. தமிழ் படிக்கலாம்!

திராவிடப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக எம்.ஏ. தமிழ் படிக்கலாம்!

திராவிட மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1997-ல் ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டம், குப்பத்தில் அமைக்கப்பட்டது திராவிடப் பல்கலைக்கழகம். இங்கு தமிழ்த் துறையில் எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, எம்ஃபில் எனப்படும் ஆய்வியல் நிறைஞர், பி.எச்டி எனப்படும் முனைவர் ஆய்வுப்படிப்பையும் இலவசமாகவே படிக்கலாம் என்பது சிறப்பு. தமிழ்ப் பட்டயச் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பட்டுவருகின்றன.

இங்கு 23 பாடப்பிரிவுகளும், அதில் 6 பிரிவுகள் ஆராய்ச்சித் துறைகளாகவும் விரிந்து வளர்ந்துள்ளன. குறிப்பாகத் திராவிட மொழிகளில் முக்கியமான தமிழ்த்துறை 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்மொழியில் முதுநிலை, எம்.பில், பிஎச்டி படிப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இத்துறை தொடங்கிய இரண்டாவது ஆண்டிலிருந்து தமிழக அரசின் ஆணையின்படி, தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், உணவுக்கட்டணம் போன்றவை தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக, இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மாரியப்பனிடம் கேட்டதற்கு, “தமிழ்த் துறையில் எம்.ஏ. முதல் பி.எச்.டி வரை முழு கல்வி உதவித்தொகை பெற்று, கல்விக் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் படிக்கலாம். OC பிரிவு மாணவர்களுக்கு மட்டும் கட்டண விலக்கு இல்லை. இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு. இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான கல்விச் சூழல்.

பிரமாண்டமான பெரிய நூலகமும், துறைசார் நூலகமும் இயங்குன்றன. இதுமட்டுமின்றி மாணவர்களின் விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக்கட்டணம் அனைத்தும் இலவசம். மற்ற மொழித்துறைகள் எல்லாவற்றிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தித்தான் முதுநிலை, எம்ஃபில், பி.எச்.டி போன்றவற்றைப் படிக்கமுடியும். தமிழ்த்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

மாணவர்களுக்குத் தமிழ் மொழி மட்டுமின்றி பிற மொழிகளும் (மாணவர்கள் விரும்பினால்) இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. அதாவது, தமிழ்த்துறையின் பாடத்திட்டத்தோடும், தனியாகவும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகள் எவ்வித கட்டணமும் இன்றி கூடுதலாக முறையாகக் கற்றுத்தரப்படுகின்றன.

சிவில் சர்வீஸ் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு செல்ல நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே, யூஜிசி – நெட் தேர்வை எழுதலாம். இதற்கென தனி இலவசப் பயிற்சி. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர் கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்ற முடியும்.

கல்வித்தகுதி

பி.ஏ., தமிழ், பி.லிட்., தமிழ், அல்லது பிற பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்போடு தமிழை ஒரு பாடமாகக் கொண்டு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10,2,3 என்ற முறையில் படித்திருக்க வேண்டும். பனிரண்டாம் வகுப்பு வரை பள்ளியில் படித்துவிட்டு, இளநிலைப் படிப்பை தொலைதூரக்கல்வி முறையில் படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தான். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்

முதுநிலை தமிழ்ப் படிப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250.அவரவர்களுக்குரிய கட்டணத்தை Account No. 153910100090383, Andhra Bank, Dravidian University Branch, IFSC Code: ANDB0001539 என்ற வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். அதற்கான அத்தாட்சியை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

திராவிடப் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பிழையின்றி நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பம், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து duadmission2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

படிப்பில் சேர நுழைவுத்தேர்வு எழுதுவதில் இருந்து இந்த ஆண்டு விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளநிலைப்படிப்பில் மாணவர்கள் எடுத்ததுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எளிதாக படிக்க இடம் கிடைக்கும். இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு.

தொடர்புக்கு:

முனைவர் பொருநை க.மாரியப்பன்.

See Also

உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி

மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,

திராவிட பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: 94868 63620

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.6.2020

விவரங்களுக்கு: www.dravidianuniversity.ac.in

-மோ.கணேசன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top