Now Reading
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் தொலைநிலைக்கல்வி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் தொலைநிலைக்கல்வி!

டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்

கோயம்புத்தூர் நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை டிப்ளமோ, டிப்ளமோ, சிறப்புச் சான்றிதழ் மற்றும் சான்றிதழ் படிப்புகளை திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி வழியாக வழங்குகிறது. மிகக்குறுகிய காலத்தில் படிக்கக்கூடிய இந்தப் படிப்புகள் நல்ல வேலைவாய்ப்புகளை அளிப்பதுடன் சொந்தத் தொழில் தொடங்குவதற்கும் உதவிபுரிகின்றன.

படிப்புகள்

அரங்க வேளாண்மை, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்தல், மூலிகைப் பயிர்கள் உற்பத்தி, தரநிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல், சுற்றுச்சூழல் மேலாண்மை, தேயிலைத் தோட்ட மேலாண்மை, பசுமைக்குடில் சாகுபடி உள்ளிட்ட 18 வகையான முதுநிலை டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

பண்ணைத் தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், பண்ணை இயந்திரவியல் மற்றும் பராமரிப்பு ஆகிய டிப்ளமோ படிப்புகள் உள்ளன. பூச்சி மருந்து விற்பனையாளர், உரக்கடை விற்பனையாளர் போன்ற பிரிவுகளில் சிறப்புச் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ் படிப்புகள்

அலங்காரத் தோட்டம், நவீனபாசனமுறை வேளாண்மை, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், மூலிகைப் பயிர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதப்படுத்துதல், சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல், மலர் சாகுபடி தொழில்நுட்பங்கள், காய்கறி விதை உற்பத்தி, தோட்டக்கலை பயிர் பெருக்க தொழில்நுட்பங்கள், வனவியல் தோட்ட தொழில்நுட்பம் உள்ள 41 வகையான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விரும்புவோர் ஏதாவது ஒரு இளநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

டிப்ளமோ, சிறப்புச் சான்றிதழ் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் பதினெட்டு வயது அடைந்தவராக இருக்கவேண்டும். சான்றிதழ் படிப்புகளுக்கு தமிழ்வழியில் பாடங்கள் கற்பிக்கப்படும். கல்விக்கட்டணம் ரூ. 2000 மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மற்றும் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கலாம். முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.

See Also

சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி கிடையாது. எப்போது வேண்டுமானாலும் படிப்பில் சேர்ந்துகொள்ளலாம்.

தொடர்புக்கு: இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை – 03

தொலைபேசி: 0422 6611229, 94890 51046

விவரங்களுக்கு: www.tnau.ac.in

– சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top