Now Reading
‘மியாவாக்கி’ குறுங்காடுகள்

‘மியாவாக்கி’ குறுங்காடுகள்

புதுச்சேரியில் தன்னார்வ அமைப்புகள் ‘அரண் புதுச்சேரி’ என்ற திட்டத்தின் கீழ் மியாவாக்கி குறுங்காடுகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மியாவாக்கி குறுங்காடு என்றால் என்ன?

மிக குறுகிய இடத்தில் அதிகளவிலான மரங்களை வளர்த்து, இயற்கைமுறையில் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியை கண்டறிந்தவர், ஜப்பான் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’. இவ்வகை காடுகள் அவரின் பெயரிலேயே ‘மியாவாக்கி குறுங்காடுகள்’ என அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மியாவாக்கி முறையை பின்பற்றி குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சிகள் பரவலாகி வருகின்றன.

புதுச்சேரியில் தன்னார்வ அமைப்புகள் ‘அரண் புதுச்சேரி’ என்ற திட்டத்தின் கீழ் மியாவாக்கி குறுங்காடுகளை அமைக்கும் முயற்சியில் உள்ளனர். நோணாங்குப்பம், வில்லியனூர், சாரம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு என ஐந்து இடங்களில் சுமார் எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் மரங்களை வளர்த்து அசத்தி வருகின்றனர். பூவரசன், வேம்பு, மகிழ மரம், இலுப்பை, நாவல், கொய்யா, மருது, நீர் மருது, வில்வம், நாகலிங்கம், காவள்ளி கொடி, புண்ணை, புங்கை மரம் எனப் பாரம்பரிய ரக மரங்கள் இந்த காடுகளில் வளர்க்கப்படுகின்றன.

See Also

‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பணி நடந்து வருகிறது. புதுச்சேரி அரசாங்கம் இந்த முயற்சியில் எங்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை என இந்த காடுகளில் உள்ள மரங்களுக்கு தன்னார்வலர்களின் உதவியினால் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். அடுத்து வரும் நாட்களில் புதுச்சேரியில் மேலும் பல இடங்களில் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்க உள்ளோம். இதற்கு எங்களோடு இணைய விரும்பும் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்கிறார் அன்னப்பிரதோஷனா சேவை அறக்கட்டளையின் நிறுவனர் பிரவீன்.

எல்லுச்சாமி கார்த்திக்

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top