Now Reading
செல்லக் குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம்!

செல்லக் குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம்!

கொரோனா அச்சுறுத்தலாலும் பள்ளிகள் திறக்காததாலும் அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் எந்நேரமும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் என்று எச்சரிக்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

கொரோனா ஊரடங்கில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்துள்ளது. ஆனால், இப்படி பல மணி நேரம் உட்கார்ந்து செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படையும். விளையாட்டுகளில் ஈடுபடாமல் தொடுதிரையை விரல்களால் தேய்த்து கொண்டிருக்கும் பழக்கம் குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகளின் செயல்திறனை முடக்குகிறது. ஒளிரும் திரையை பல மணி நேரம் தொடர்ந்து பார்ப்பதால் அவர்களுக்கு பல் கண் பிரச்சினைகள், பார்வைத் திறன் குறைபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது.

முக்கியமாக தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியிருப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறனும் பாதிக்கும். மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் இக்குழந்தைகள் தனிமைப்பட்டு விடுகின்றனர்.

செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப் படுத்தியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மழலை வகுப்பில் சேரும்போதே உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போனை, தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பார்த்தால் அவர்களின் உடல் வளர்ச்சியும், உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. 5 வயதுக்குள் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய்விடுவதும், பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களது உடல் இயக்க திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.

See Also

மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் வந்து விடுகிறது. எனவே, செல்லக் குழந்தைகளுக்கு செல்போன் வேண்டாம் என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.

-சு. வீரமணி

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top