Now Reading
குடியில்லாத வீட்டுக்கு வாடகையா? குமுறல்!

குடியில்லாத வீட்டுக்கு வாடகையா? குமுறல்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட பலரும்,  பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கு கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுத்துவருவதாக குமுறுகின்றனர்.

கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் பல நிறுவனங்கள் கடந்த நான்கு மாத காலமாக இயங்கவில்லை. வேலையில்லாத காரணத்தாலும், வீட்டிலிருந்தே வேலை பார்க்க சில நிறுவனங்கள் சொல்லிவிட்டதாலும், வேகமாக பரவும் கொரோனா அச்சத்தாலும் சென்னையில் இருந்த வெளியூர்காரர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். ஆனால், நான்கு மாதங்களாக சென்னையில் உள்ள வாடகை வீட்டில் குடியிருக்கவில்லை என்றாலும் வாடகை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று குமுறுகின்றனர் ஊர்  திரும்பியவர்கள். 

This image has an empty alt attribute; its file name is house-rent-1.jpg

“வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என்பதால் கொரோனோ பொது முடக்கம் ஆரம்பித்த மார்ச் இறுதியிலேயே சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்துவிட்டோம். ஆனாலும், அதன்பிறகு தொடர்ந்து நான்கு மாதங்களாக வாடகை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்க வேண்டாம் என்று அரசு சொல்லியும் யாரும் கேட்கவில்லை. எனக்காவது வேலை இருக்கிறது பரவாயில்லை. பல நண்பர்களுக்கு வேலையே இல்லை, இருந்தாலும் அவர்களும் நான்கு மாதங்களாக கடன்வாங்கி வீட்டு வாடகையை கொடுத்து வருகின்றனர்” என்று ஆதங்கம் தெரிவிக்கிறார் விக்னேஷ்வரன்.

See Also

தொடர்ந்து, “வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டால் எங்களுக்கும் கடன் இருக்கிறது. அதனால்தான் வாடகை வசூலிக்கிறோம் என்கின்றனர். தமிழகத்தில் பல வீட்டு உரிமையாளர்கள் மனசாட்சியுடன் வீட்டு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். எனவே, குறைந்தபட்சம் வேலையிழந்தவர்களிடமாவது வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது. இந்த நான்கு மாதங்களுக்கு பாதி வாடகை மட்டுமே வாங்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்தால் எங்களைப் போன்ற பல குடும்பங்களும் ஓரளவு நிலைமையை சமாளிக்கும். வங்கியில் கடன் வாங்கி சிரமத்தில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த நான்கு மாதங்களுக்கு இஎம்ஐ வட்டியை தள்ளுபடி செய்யலாம்” என்கிறார் கவலையுடன்.

-சு. வீரமணி

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top