Now Reading
பயணங்கள் இனிக்கட்டும்!

பயணங்கள் இனிக்கட்டும்!

ஊரடங்கு தளர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர மீதியுள்ள மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து சமூக இடைவெளியுடன் தொடங்கியுள்ளது. மக்களும் பயணம் செய்து வருகின்றனர்.  பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கான சில ஆலோசனைகள்…

குழந்தைகள், கர்ப்பிணிகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட சுவாசத்தடை நோய் (சிஓபிடி), நிமோனியா, சர்க்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற துணை நோய்கள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருங்கள்; தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம்.

  • இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருப்பவர்கள் பயணத்தைத் தள்ளிப்போடுங்கள்.
  • கொரோனா பரவல் உள்ள இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம்.
  • பயணத்துக்குப் பிறகு தனிமைப் படுத்துதல்/தனிமைக் கண்காணிப்பு அவசியமா என்பதை முதலிலேயே தெரிந்துகொள்வது நல்லது.
  • தனிமைக் கண்காணிப்பு அவசியம் என்றால் எங்கு, எத்தனை நாட்களுக்கு, எவர் செலவு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
  • பொதுப் போக்குவரத்தை முடிந்தவரை குறைக்கப் பாருங்கள். அதிலும் சமூக இடைவெளி காப்பது முக்கியம்.
  • கூட்டமாக உள்ள பேருந்து நிலையத்தில் அதிக நேரம் காத்திருப்பதைத் தவிருங்கள்.
  • (வாடகை) காரில் செல்வது கொரோனா பரவும் வாய்ப்பைக் குறைக்கும்.
  • காரில் செல்வதாக இருந்தால் 3 பேருக்கு மேல் பயணப்பட வேண்டாம்.
  • ஆட்டோவில் செல்வதாக இருந்தால் 2 பேருக்கு மேல் பயணப்பட வேண்டாம்.
  • வேனில் 10 பேருக்கு மேல் பயணப்பட வேண்டாம்.
  • பயணத்தில் முகக் கவசம் அணிவது முக்கியம்.
  • பயணத்தின்போது கைக்கு அடக்கமான சானிடைசரைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
  • அடிக்கடி சானிடைசரால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • பேருந்துப் பயணத்தில் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கைகளை சோப்புப்போட்டுக் கழுவுங்கள்.
  • நீண்ட பயணமாக இருந்தால் மருந்து, மாத்திரைகளைக் கொண்டுசெல்ல மறக்காதீர்கள்.
  • பயணத்தின்போது முகத்தை, மூக்கை, வாயை, கண்களைத் தொட வேண்டாம்!
  • முகக் கவசத்தை நீக்கிவிட்டு அல்லது கீழே இறக்கி விட்டுக்கொண்டு பேசக்கூடாது.
  • முடிந்தவரை குறைந்த அளவில் லக்கேஜ் எடுத்துக்கொள்ளவும்.
  • ரயில் மற்றும் பேருந்துப் பயணத்தில் போர்த்திக்கொள்ளும் போர்வையை நீங்களே எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.
  • பயணத்தின்போது புத்தகம் படிப்பது நல்லது; அருகில் உள்ளவர்களோடு பேசுவதைக் குறைத்துக்கொள்ள இது வழி கொடுக்கும்.
  • பயணத்தின்போது தேவையில்லாமல் எந்தப் பொருளையும் தொடாதீர்கள்.
  • தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுகளைத் தேவையான அளவுக்குக் கைவசம் கொண்டு சென்றுவிடுங்கள்.
  • பிறரிடம் சந்தேகம் கேட்பதைத் தவிருங்கள்.
  • பயணத்தின்போது பலரும் கூடும் மோட்டல்களில் எதையும் வாங்கி சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவையானவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்வது மிக நல்லது.
  • ஆரோக்கியசேது ஆப்ஸ் பயன்படுத்துங்கள்.
  • வாகனத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் சமூக இடைவெளி காக்கவும்.
  • பயணம் முடிந்ததும் சோப்புப் போட்டுக் குளித்துவிடுங்கள்.

-மருத்துவர் கு. கணேசன், ராஜபாளையம்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top