Now Reading
கவுன்சலிங் மற்றும் சைக்கொதெரபி இணைந்த புதுமையான படிப்பு

கவுன்சலிங் மற்றும் சைக்கொதெரபி இணைந்த புதுமையான படிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக புதுமையான எம்எஸ் கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு உளவியல், கவுன்சலிங் தொடர்பான டிப்ளமோ, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

முதுநிலைப் படிப்பில் சேர ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். 10+2+3 என்ற அடிப்படையில் மாணவர்கள் படித்திருக்கவேண்டும். உளவியல் கவுன்சலிங், கைடன்ஸ் மற்றும் கவுன்சலிங், ஸ்கூல் கவுன்சலிங் பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாவது ஆண்டில் சேர்ந்துகொள்ளலாம். வயதுவரம்பு கிடையாது.

நேர்முக வகுப்புகள் தொடர்ந்து 21 ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். ஒரு மாத காலம் இன்டர்ன்ஷிப் உண்டு. மாணவர்கள் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

கவுன்சலிங் – பிஸியோதெரபி படிப்புக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி. ராஜமோகன், “இந்தியாவில், மருத்துவப் படிப்புகளில் சைக்கோதெரபி ஒரு பகுதியாக கற்பிக்கப்பட்டுவந்தது. உளவியல் பிரச்சினைகள் சார்ந்த சிகிச்சை அளிக்காமல், அறிகுறிகள் சார்ந்து அளிக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினைகளில் கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி இணையும்போது பாதிக்கப்பட்ட நோயாளி எளிதில் குணமடைய முடியும். அதற்காகவே இரண்டையும் சேர்த்து புதிய படிப்பை அறிமுகம் செய்திருக்கிறோம்.

கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி பற்றிய அரிய படிப்பை முடித்தவர்களுக்கு குடும்ப நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். எங்கும் வேலையில் சேராமல் தனித்துவமாகவும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன” என்கிறார்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஓர் ஆண்டில் இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும். கொரோனா ஊரடங்கு நடைமுறைகளால் புதிய படிப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

See Also

சைக்காலஜிக்கல் டெஸ்டிங், சைக்கோதெரபிஸ், லோகோ தெரபி, என்எல்பி, டிஏ, சிபிடி, இபிடி, ஹைப்னோசிஸ்ட் மல்டி மாடல் தெரபி, யோகா தெரபி, இசை மற்றும் ஓவியம் தெரபி உள்ளிட்ட பாடங்கள் முதுநிலைப் படிப்பில் கற்பிக்கப்படும்.

தொடர்புக்கு: டாக்டர் ஜி. ராஜமோகன் / 98401 94489

விவரங்களுக்கு: www.tnou.ac.in

– சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top