Now Reading
ஆயிரம் வடை போடும் திண்டுக்கல் சிவா!

ஆயிரம் வடை போடும் திண்டுக்கல் சிவா!

கொரோனா காலத்திலும் தினமும் 1000 வடைகள் விற்பனை செய்து அசத்தி வருகிறார் திண்டுக்கல் சிவா!

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த 25 வருடங்களாக சாலையோரத்தில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார், சிவா. மாலைவேளையில் பருப்பு வடை, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, அரிசி போண்டா, வெங்காயபோண்டா, உருளைக் கிழங்கு, மசால் போண்டா, காளிபிளவர் சில்லி என பலகார வகை பலகாரங்களை சுவையாக சுட்டுத் தள்ளுகிறார் சிவா.

“நான் இருபத்தி ஐந்து வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆரம்பக் காலத்தில் ஒருவடை இருபத்தி ஐந்து பைசாவுக்கு விற்பனை செய்தேன். பிறகு ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என படிப்படியான விலை உயர்ந்து இப்ப ஒருவடை இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.

தினமும் மாலை ஐந்து மணிக்கு கடைபோட்டால் இரவு பத்துமணி வரையிலும் வியாபாரம் இருக்கும். வியாபார நோக்குடன் இல்லாமல் வீட்டு முறைப்படி தரமான பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் தயாரித்து, தக்காளி சட்னியுடன் தருவதால் மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். ஒருநாள் பயன்படுத்திய எண்ணெய் அடுத்தநாள் பயன்படுத்துவதில்லை.

தினமும் வகை வகையாக 1500 பலகாரங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளேன். இப்ப கொரோனா காலம் என்பதால் இரவு எட்டுமணியோடு கடையை அடைக்கச் சொல்கிறார்கள். அதனால் தினமும் சுமாராக 1000 வடைகள்தான் விற்பனை ஆகிறது.

See Also

திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திண்டுக்கல் மணிக்கூண்டுக்கு வரும் மக்கள் எங்கள் கடையைத் தேடிவந்து பலகாரங்களை வாங்கிச் செல்வர். எங்கள் கடை பலகாரத்திற்கு தனி வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் தினமும் தேவையான பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கும் வாங்கி செல்வர். வியாபாரத்தின் மூலம் தினமும் எனக்கு 500 ரூபாயும் என் மனைவிக்கு 250 ரூபாய் என 750 ரூபாய் கிடைக்கிறது” என்றார் சிவா.

-எம். கலீல்ரஹ்மான்  

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top