Now Reading
முகக்கவசம் இருக்கு! கவலை எதற்கு?

முகக்கவசம் இருக்கு! கவலை எதற்கு?

முகக்கவசம் அணியும் போது பின்பற்ற வேண்டியவை

முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பு கைகளை, குறைந்தது 20 விநாடிகளுக்கு நன்றாகச் சோப்பு அல்லது சானிடைசர் தேய்த்துக் கழுவிக்கொள்ள வேண்டும். முகக் கவசத்தின் வார்களை மட்டும் கைகளால் தொட்டுத் தூக்கவேண்டும்.

மூக்கு, வாய், தாடை ஆகிய பகுதிகள் நன்றாக மூடும்படி காதுகளில் பொருத்திக் கொள்ள வேண்டும். முகத்துக்கும் முகக் கவசத்துக்கும் நடுவில் இடைவெளி இருக்கக்கூடாது.

முகக் கவசத்தின் முன் பக்கத்தில் கைபடக்கூடாது. அப்படிப் பட்டுவிட்டால், உடனே கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

முகக் கவசம் அழுக்காகிவிட்டால், அதைக் கழற்றிவிட வேண்டும்.மூடியுள்ள குப்பைத் தொட்டியில், அதைப் போட்டு மூடிவிட வேண்டும். இப்போது ஒருமுறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கழற்றும்போது கைகளைப் பின்பக்கமாகக் கொண்டு சென்று, அதன் வார்களைக் கழற்றி முன்பக்கமாக வெளியில் எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டுமே ஒரு முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். அதை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது.

ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

See Also

துணியாலான முகக் கவசத்தை சோப்புப் போட்டுத் துவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம்.

முகக் கவசத்தைவிட முகத்துக்கு முழுப் பாதுகாப்புத் தரக்கூடியது ‘ஃபேஸ் சீல்டு’ (Face Shield) எனப்படும் முகமறைப்புதான். இதைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

-டாக்டர் கு. கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top