Now Reading
தடயவியல் துறையில் தடம் பதிக்க வாங்க…

தடயவியல் துறையில் தடம் பதிக்க வாங்க…

இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் குஜராத் ஃபாரன்ஸிக் சயின்ஸ்

பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு, முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன படிப்புகள்?

ஃபாரன்ஸிக் சயின்ஸ் துறையில் ஃபாரன்ஸிக் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, மல்டிமீடியா ஃபாரன்ஸிக்ஸ், டாக்ஸிக்காலஜி, ஃபாரன்ஸிக் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் எம்.எஸ்சி படிப்புகளும், சைபர் செக்யூரிட்டி அண்ட் இன்சிடென்ட் ரெஸ்பான்ஸில் எம்.டெக் படிப்பும், ஃபாரன்ஸிக் டாக்ஸிக்காலஜி, பிங்கர் பிரிண்ட் சயின்ஸ், ஹியூமனிடேரியன் ஃபாரன்ஸிக்ஸ், வெப் அண்ட் மொபைல் செக்யூரிட்டி, மால்வேர் அனாலிசிஸ் அண்ட் ரிவர்ஸ் என்ஜினீயரிங், கொஸ்டின்ட் டாகுமெண்ட்ஸ் ஆகியவற்றில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகளும், ஆன்டி கரப்ஷன், ஃபாரன்ஸிக்ஸ் அண்ட் லா, ஃபாரன்ஸிக் ஜர்னலிஸம், கிரைம் சீன் போட்டோகிராபி ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.

மேனேஜ்மெண்ட் அண்ட் ட்ரெய்னிங் துறையில் ஃபாரன்ஸிக் அக்கவுண்டிங், ஹெல்த்கேர் அண்ட் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், ஹோம்லேண்ட் செக்யூரிட்டி, சைபர் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் எம்பிஏ படிப்புகளும், ஃபாரன்ஸிக் அக்கவுண்டிங்கில் முதுநிலை டிப்ளமோ படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன.

ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையில் ஃபாரன்ஸிக் பார்மஸி, பார்மாசூட்டிக்கல் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் ஆகியவற்றில் எம்.பார்ம் படிப்புகளும், சிவில் என்ஜினீயரிங் வித் ஸ்பெஷலைசேஷன் இன் ஃபாரன்ஸிக் ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினீயரிங்கில் எம்.டெக். படிப்பும், கெமிஸ்ட்ரி வித் ஸ்பெஷலைசேஷன் இன் ஃபாரன்ஸிக் அனலிடிகல் கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் சயின்ஸ், ஃபாரன்ஸிக் நேனோடெக்னாலஜி வித் ஸ்பெஷலைசேஷன் இன் நேனோசயின்ஸ் அண்ட் நேனோ டெக்னாலஜி – நேனோபயோ டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி வித் ஸ்பெஷலைசேஷன் இன் ஃபாரன்ஸிக் ஃபுட் அனாலிசிஸ் ஆகியவற்றில் எம்.எஸ்ஸி படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன.

பிஹேவியரல் சயின்ஸ் துறையில் கிளினிக்கல் சைக்காலஜி, ஃபாரன்ஸிக் சைக்காலஜி, நியூரோ சைக்காலஜி ஆகியவற்றில் எம்.எஸ்சி படிப்புகளும், கிரிமினாலஜி வித் ஸ்பெஷலைசேஷன் இன் ஃபாரன்ஸிக் சைக்காலஜியில் எம்.ஏ., படிப்பும், சைபர் சைக்காலஜி துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன.

கல்வித்தகுதி

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் சம்மந்தப்பட்ட துறையில் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.

படிப்பில் சேர விரும்புவோர் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கோவிட் பிரச்சினை காரணமாக, நுழைவுத்தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

See Also

விண்ணப்பக்கட்டணம், நுழைவுத்தேர்வு குறித்த விவரங்கள், கல்வித்தகுதி அனைத்தும் சம்பந்தப்பட்ட இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.8.2020

விவரங்களுக்கு: www.gfsu.edu.in

– மோ.கணேசன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top