Now Reading
உடல்நலம் காத்து, மனபயம் போக்கும் ஆர்சனிகம் ஆல்பம் – 30 சி

உடல்நலம் காத்து, மனபயம் போக்கும் ஆர்சனிகம் ஆல்பம் – 30 சி

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்தாக ஆர்சனிகம் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை மக்கள் எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர். ஞானசம்பந்தன், அதன் மருத்துவக் குணங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றி விளக்கமளிக்கிறார்…

“கொரோனா தடுப்பு மருந்தாக ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கப் பயன்படுகிறது. மூன்று நாட்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் 30 சி அளவுள்ள மூன்று மாத்திரைகளை (அளவுக்கேற்ப ஒன்று அல்லது மூன்று) எடுத்துக்கொள்ளவேண்டும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் சாப்பிடலாம். ஆரோக்கியமாக இருப்பவர்களும் வேறு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களும் சாப்பிடலாம். அளிக்கப்படும் மருந்தில் மூலப்பொருட்கள் இல்லாததால் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

கொரோனா அறிகுறி ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக ரஸ்டாக்ஸ், ஜெலிஸ்மியம், பிரயோனியா, பெல்லடோனா, யூபடேரியம், பர்போலியேட்டம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஹோமியோபதி மருத்துவமுறை ஒத்த மருத்துவ முறை எனப்படும். அதாவது நோய்தொற்றுக் கிருமிகளை நுண்ணிய அளவில் எடுத்து, பல படிநிலைகளில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி. பாம்பின் விஷம் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படும் முறை.

ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து என்பது விஷக் கிருமியின் நூறில் ஒரு பங்கு. வீரியம் மிகவும் குறைக்கப்பட்டது. அதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருந்துகள் ஆல்கஹால் வடிவில்தான் கிடைக்கும். மெடிகேட் செய்யப்பட்டு பாட்டிலில் அடைக்கப்படுகின்றன.

30 சி அளவுக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மருந்தில் ஆர்சனிக் துளியும் இருக்காது.

ஹோமியோபதி மருந்தை நாக்கில் சுவைத்துச் சாப்பிடும்போது, அது நாக்கின் நுனியில் உள்ள நரம்புகளைத் தூண்டுகிறது. உடல் முழுவதும் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துகிறது. ஹோமியோபதி மருத்துவமுறையில் மிக நீர்த்துப்போன ஒரு மருந்தை நாம் உட்கொண்டால், அது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

ஆர்சனிகம் என்பது மிகவும் நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஆர்சனிக் ட்ரையாக்ஸைட்.

ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து ஏற்கெனவே பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சொரியாசிஸ், விடிலிகோ போன்ற தோல் நோய்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும், ஆஸ்த்மாவிற்கும் மருந்தாக அளிக்கப்படுகிறது.

இந்த ஹோமியோபதி மருந்தை ஒருவர் கடைகளுக்குச் சென்று தாமாகவும் வாங்கிச் சாப்பிடலாம். ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைக்குப் பிறகு, மருந்தின் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையும் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும்.

தமிழக அரசு ஆர்சனிகம் ஆல்பம் மருந்தை மாநிலம் முழுவதும் விநியோகம் செய்துவருகிறது. அரசு அமைப்பான தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் அமைப்பு அதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

பிப்ரவரி மாதத்திலேயே மணிப்பூர் மாநிலத்தில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து கொரோனா தடுப்பு மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இன்று அந்த மாநிலம் பசுமை மண்டலமாக மாறியுள்ளது. இந்த ஹோமியோபதி மருந்தால் ஏற்பட்ட விளைவு என்று உறுதியாகச் சொல்லலாம்.

See Also

கேரளா மாநிலத்தில் ஹோமியோபதி மருந்துகளால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 1500 மருந்தகங்கள் மூலம் மருந்துகள் மக்களுக்குக் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் 6500 ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மருந்து விநியோகம் செய்யப் பட்டிருக்கிறது. நகரங்களைவிட கிராமங்களில்தான் அதிக மக்கள் ஆர்சனிகம் ஆல்பம் பற்றி தெரிந்துவைத்து சாப்பிடுகிறார்கள்.

இன்று கொரோனா பாதிப்பைவிட, அதனால் ஏற்படும் மனபயம் அதிகமாக இருக்கிறது. மனநலத்தை  பாதுகாக்கவும் ஆர்சனிகம் ஆல்பம் பயன்படுகிறது.

– சுந்தரபுத்தன்

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top