Now Reading
தொடாதே!

தொடாதே!

அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

 

  • அலுவலகத்தில் உள்ள மேசைகள், தரைப்பகுதி, கழிப்பறை போன்றவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வரவேற்பறையை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
  • பயோமெட்ரிக் வருகைப் பதிவு வேண்டாம்.
  • அலுவலகத்துக்குள் நுழையும்போதும், வெளியில் வரும்போதும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்.
  • மேசையில் எப்போதும் கைக்கு அடக்கமான சானிடைசரை வைத்துக்கொள்ளுங்கள்.
  • மற்றவர்கள் பயன்படுத்தும் வகையிலும் சிறிய சானிடைசர்களை வைத்துவிடுங்கள்.
  • அலுவலகத்தில் மற்றவர்களும் பயன்படுத்தக்கூடிய தொலைபேசி, காபி தம்ளர், ஃபிளாஸ்க் போன்ற பொருட்களைப் பயன்படுத்தியதும் சானிடைசரால் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்.
  • கழிப்பறைக்குச் சென்றுவந்ததும் கைகளைக் கழுவ வேண்டும்.
  • அலுவலகத்தில் உள்ள பொருட்களைத் தேவையில்லாமல் தொடுவதைத் தவிர்க்கவும். உதாரணம்: கதவுக் கைப்பிடிகள்.
  • நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மேசை, லேப்டாப், அலைபேசி, கீபோர்டு போன்றவற்றை தினமும் இருமுறை கிருமி நீக்கம் செய்யுங்கள்.
  • யோசித்துக்கொண்டே முகத்தை, மூக்கை, வாயை, கண்களைத்தொட வேண்டாமே!
  • யாரிடமும் கைகுலுக்காதீர்கள்.
  • உங்கள் அறையை ‘போன்பூத்’ போன்று அமைத்துக்கொள்வதும் நல்லது.
  • ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடாதீர்கள். அப்போதும் சமூக இடைவெளி காக்கவும்.
  • அலுவல் சார்ந்தவற்றை அலைபேசியில்/மின்னஞ்சலில் சொல்லுங்கள். நேரில் வரவழைத்து வழிகாட்டுவதை குறைத்துக்கொள்ளுங்கள்.
  • அலுவல் அறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
  • ஏசி போட வேண்டாம்.
  • டெலிகான்ஃபெரன்ஸ் முறையில் கூட்டம் போடுங்கள்.
  • பணியாளர்களுக்கு எப்படிச் சுத்தமாக  இருப்பது என்பது பற்றி தெளிவுபடுத்துங்கள்.
  • பணியாளர்களுக்கு இருமல், தும்மல் இருந்தால் உடனே தனிமைப்படுத்துங்கள்; மருத்துவ உதவிக்கு அனுப்பிவையுங்கள்.

-டாக்டர். கு. கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top