Now Reading
மெட்டீரியல் சயின்ஸில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ !

மெட்டீரியல் சயின்ஸில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ !

பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு சயின்டிஃபிக் ரிசர்ச் கல்வி நிறுவனம், இளம் மாணவர்களை அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சர்வதேச தரத்திற்கு இணையாக ஆய்வில் ஈடுபடுத்துகிறது.

இங்கு ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்புகள், முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

படிப்பில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் எம்.எஸ்சி படித்து முடித்திருக்க வேண்டும். கல்லூரிகளில் பணியாற்றுவோரும் சேரலாம். ஓராண்டுக்கு உதவித்தொகையும் உண்டு.

சம்மந்தப்பட்ட இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, admissions@jncasr.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களை ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யப்படுவர். இரண்டு செமஸ்டர்கள் கொண்ட படிப்பானது புத்தகங்கள் சார்ந்து மட்டுமல்லாது புராஜக்ட் சார்ந்தும் நடத்தப்படும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பும்போது, வேறு எந்த சான்றிதழ்களையும் இணைத்து அனுப்பத் தேவையில்லை. சேர்க்கைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு அனுப்பினால் போதும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய கடைசி தேதி: 10.07.2020

விண்ணப்பத்தை மின்னஞ்சலில் சமர்ப்பிக்கக் கடைசி தேதி: 13.07.2020

See Also

நேர்காணல் நடத்தப்படும் தேதி: 20.07.2020

படிப்பு தொடங்கப்படும் தேதி:

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2020

விவரங்களுக்கு: www.jncasr.ac.in/admit

– மோ.கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top