Now Reading
ஆய்வு மாணவர்களுக்கு ரூ. 31 ஆயிரம் உதவித்தொகை

ஆய்வு மாணவர்களுக்கு ரூ. 31 ஆயிரம் உதவித்தொகை

பிஇ, பிடெக் மற்றும் முதுநிலை படித்தவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் திட்டம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) – நவீன தொழில்நுட்பம் சார்ந்த ரேடியோ, ரேடார் மற்றும் அறிவுசார் கண்காணிப்புத் துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட விரும்பும் இளம் விஞ்ஞானிகளுக்காக, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் ஆராய்ச்சித் திட்டத்தில் சேர தகுதியும் விருப்பமும் கொண்ட இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி போன்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடமுடியும்.

கல்வித்தகுதி

ஜேஆர்எப் 1 திட்டத்திற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக் அல்லது எம்டெக், எம்இ படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யூஜிசி நெட் அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். டிசைன் மற்றும் அனாலிசிஸ் ஆப் அல்காரிதம்ஸ் திறன், சி, சி++, பைதான் மற்றும் ஹெச்எஐ டெவலெப்மெண்ட் புரோகிராமிங், மெசின் லேர்னிங் அல்காரிதம், ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம் டெவலப்மெண்ட் பிரேம்வொர்க் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதிகளாகக் கொள்ளப்படும்.

ஜேஆர்எப் 2 திட்டத்திற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிக்கேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக் அல்லது எம்இ, எம்டெக் படித்திருக்கலாம். யூஜிசி நெட் மற்றும் கேட் தேர்வுகளில் தேர்ச்சி அவசியம். மேலும் கம்யூனிக்கேஷன் மற்றும் டிஎஸ்பி அல்காரிதம்ஸ், எம்பெட்டட் சிஸ்டம் அண்ட் டிசைன், காக்னிட்டிவ் டெக்னாலஜி போன்ற தொழில்நுட்பங்களில் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதிகளாகக் கருதப்படும்.

விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதியன்று 28 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின்னஞ்சல் (director@dysl-ct.drdo.in) மூலமாகவும் பெற்றுக்கொள்ளமுடியும். அஞ்சல்வழியில் விண்ணப்பிக்க வேண்டும். சுயசான்றொப்பமிட்ட கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கான சான்றிதழ் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:

இயக்குனர், DRDO இளம் விஞ்ஞானி ஆய்வகம் – அறிவுசார் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), 5 வது தளம், ஐஐடிஎம் ரிசர்ச் பார்க், கனகம்
சாலை, தரமணி, சென்னை – 600 113.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

See Also

ஜேஆர்எப் 1 மற்றும் ஜேஆர்எப் 2 திட்டத்தில் நேர்முகத்தேர்வு மூலம் தலா இரண்டு தகுதியான பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மாதந்தோறும் அவர்களுக்கு ரூ. 31 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் உயரதிகாரியின் கையொப்பமிட்ட பறைசாற்றல் ஆவணத்துடன் விண்ணப்பிக்கவேண்டும்.

ஃபெல்லோஷிப் வழங்குவது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமானதாகும். ஏற்கெனவே வேறு நிறுவனங்களில் ஜேஆர்எப் பெறுபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை.

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் இரண்டு ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். பின்னர் விதிமுறைகளின்படி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 5.7.2020

விவரங்களுக்கு: www.drdo.gov.in

-சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top