Now Reading
கடைகளுக்குச் செல்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை!

கடைகளுக்குச் செல்வோர் கடைப்பிடிக்க வேண்டியவை!

முடிந்தவரை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குங்கள்.

 

  • ஆன்லைனில் வாங்குவதாக இருந்தால், வீட்டில் அந்தப் பொருள்களைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டுச் செல்லும்படி கூறுங்கள்.
  • நீங்கள் அவற்றை வீட்டுக்குள் எடுத்துச்சென்று, வேறு சுத்தமான பாத்திரத்துக்கு மாற்றிவிட்டு, உங்கள் கைகளைச் சோப்புத் தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள்.
  • பணப் பரிவர்த்தனை ஆன்லைனில் இருக்கட்டும்.
  • வீட்டுக்கு வரும் காய்கறி வண்டியைப் பயன்படுத்துங்கள். முடியாதபோது கடைக்குச் செல்லுங்கள்.
  • தினமும் செல்வதைவிட வாரத்துக்கு ஒரு நாள் செல்வது நல்லது.
  • போகும் முன்பு உங்கள் கைகளை சுத்தப் படுத்திக்கொள்ளுங்கள். முகக் கவசம் அணிந்துகொள்ளுங்கள். கூட்டமாக இருக்கும் கடைகளுக்குச் செல்லாதீர்கள்.
  • கடைகளிலும் சமூக இடைவெளி காப்பது முக்கியம்.
  • பொருள் வாங்க சுத்தமான/ கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பைகளை நீங்களே கொண்டு சென்று விடுங்கள்.
  • கடையில் எந்தப் பொருளையும் அவசியம் இல்லாமல் தொடாதீர்கள். அங்கு சென்றதும் உங்கள் முகம், மூக்கு, கண்களைத் தொடுவது கூடாது.
  • முகக் கவசத்தை விலக்கிக் கொண்டு/ இறக்கிக்கொண்டு கடைக்காரரிடம் பேசக்கூடாது.
  • கறிக் கடைகளில் ஆடு / கோழிகளைக் கட்டிப்போட்டு இருந்தால் அவற்றை தொடாதீர்கள்; விலங்குக் கழிவுகள் காணப்பட்டால், அவற்றில் கையோ காலோ படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • வாங்கி வந்த பொருள்களை வேறு பையில்/ பாத்திரத்துக்கு மாற்றிவிடுங்கள். வீட்டுக்கு வந்ததும் குளித்துவிடுங்கள். முடியாவிட்டால் கை, கால், முகத்தையாவது கழுவிக் கொள்ளுங்கள்.
  • இருமல், தும்மல் இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதைத் தவிருங்கள்.
  • இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ளுங்கள்.
  • கைக்குட்டை இல்லாவிட்டால், முழங்கையை மூக்குக்கு முன்னால் கொண்டுவந்து மறைத்துக் கொள்ளுங்கள்.

தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

கையுறையை நம்பினோர் கைவிடப்படார்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோருக்குக் கையுறை தேவை.

வீட்டில் உடல் நலமில்லாதவரைக் கவனித்துக்கொள்பவர்களுக்குக் கையுறை தேவை. மற்றவர்களுக்குத் தேவையில்லை.

ஒரு கையுறையை ஒருநாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைக் கிருமி நீக்கம் செய்து மறுபடியும் 2 நாட்கள் கழித்துப் பயன்படுத்தலாம்.

ஒவ்வொருமுறை கையுறையைக் கழற்றியதும் கைகழுவ வேண்டும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கையுறையை மூடியுள்ள குப்பைத் தொட்டியில் போட்டு மூடிவிட வேண்டும்.

See Also

கை கழுவுவது அவசியம்!

கொரானாவைப் பொறுத்தவரை கைகள் சுத்தமாக இருந்தால் அதைத் தடுப்பது எளிது. காரணம், இந்தக் கிருமி நம் மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாகத்தான் உடலுக்குள் செல்கிறது. கொரானா பாதிப்புள்ளவர் இருமும்போது, நாம் எதிரில் இருந்தால் நம் முகத்திலோ, உடலிலோ அந்தக் கிருமிகள் பட்டிருக்கலாம். அந்த இடங்களை நம் கைகளால் தொட்டுவிட்டு, அதே கைகளால் வாயைத் தொடுகிறோம் என்றால், கிருமிகள் மூச்சுப்பாதைக்குள் சென்றுவிடும். மாறாக, கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொண்டால் இந்த ஆபத்து வராது.

-டாக்டர். கு. கணேசன்

தொகுப்பு: மோ. கணேசன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top