Now Reading
‘நாட்டுப் பண்’ பாடினால் நன்னடத்தை சான்றிதழ்!

‘நாட்டுப் பண்’ பாடினால் நன்னடத்தை சான்றிதழ்!

பல்வேறு பணி விண்ணப்பங்களுக்காக நன்னடத்தை சான்றிதழ் வாங்க வருபவர்களை ‘நாட்டுப் பண்’ பாடினால் நன்னடத்தை சான்றிதழ் என நிபந்தனை விதித்து தேசியப் பற்றை வளர்த்து வருகிறார் புதுச்சேரி இலாசுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை – சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 22) வணிகவியலில் இளங்கலை பட்டம் முடித்துள்ள இவருக்கு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், நிதி சம்பந்தமான பணி என்பதால் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து குற்ற வழக்க பின்னணி எதுவும் இல்லை என்ற நன்னடத்தை சான்றிதழை பெற்று வந்து கொடுக்கும்படி சொல்லியுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு அருகில் உள்ள காவல் நிலையமான இலாசுப்பேட்டை காவல் நிலையத்தை அணுகி நன்னடத்தை சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பிழையில்லாமல் பாடினால் நன்னடத்தை சான்றிதழ் கொடுப்பதாக சொல்லியுள்ளார். சில நிமிடங்களில் தமிழ்த் தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடி சான்றிதழை பெற்று தன் வேலையை உறுதி செய்துள்ளார் வினோத்.

“பொதுவாக தனியார் நிதி நிறுவனங்கள், வங்கி பணிகள், தனியார் பிரிவு காவலாளிகள், வீட்டு பாதுகாவலர்களை பணிக்கு எடுக்கும் போது சம்மந்தப்பட்டவரின் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை என்ற நன்னடத்தை சான்றிதழ் காவல் துறையின் சார்பில் கொடுப்பது வழக்கம். அதனடிப்படையில் இளைஞர்கள் நன்னடத்தை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பார்கள். எங்கள் ஆய்வாளர் கிருஷ்ணன் சார், தமிழ்த் தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாட சொல்வார். அவர்களுக்கு நாட்டின் மீதான பற்று எந்தளவுக்கு உள்ளது என்பதற்காக இந்த பரீட்சை.

See Also

ஒருமுறை தமிழ்த் தாய் வாழ்த்தை பாடிய அந்த இளைஞரால் தேசிய கீதத்தை சில வரிகளுக்கு மேல் பாட முடியவில்லை. அதனால், மறுநாள் வந்து தேசிய கீதத்தை சரியாக பாடிவிட்டு சான்றிதழை பெற்று செல்லுமாறு கூறினோம். அந்த இளைஞரும் மறுநாள் தேசிய கீதத்தைத் தடையின்றி பாடி காட்டினார். நாங்களும் நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து அனுப்பினோம்’ என்கிறார் இலாசுப்பேட்டை காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் கீர்த்தி.

-எல்லுச்சாமி கார்த்திக்

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
1
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top