Now Reading
ஆயத்த ஆடை உற்பத்தி டிப்ளமோ

ஆயத்த ஆடை உற்பத்தி டிப்ளமோ

பிளஸ் டூ படித்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசப் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள அப்பேரல் டிரெய்னிங் அண்ட் டிசைன் சென்டர் எனப்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் ஆயத்த ஆடை தொடர்பான பலவகைப்பட்ட டிப்ளமோ பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. தற்போது ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆயத்த ஆடை உற்பத்தி டிப்ளமோ தொடர்பான வகுப்புகள் கிண்டி திருவிக இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் உள்ள ஏடிடிசி அலுவலகத்திலும், தையல் மெஷின் ஆபரேட்டர் வகுப்புகள் எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள ஏடிடிசி அலுவலகத்திலும் நடைபெறும். இரு பாலரும் பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம்.

கல்வித்தகுதி

இரண்டு மாத ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்நுட்ப டிப்ளமோ (AMT) படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று மாத தையல் மெஷின் ஆபரேட்டர் (SMO) பயிற்சியில் சேர ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஹெச்சிஎல் அறக்கட்டளையின் சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ் ஏடிடிசி மையம் இந்த வேலைவாய்ப்பு வாய்புடன் கூடிய தொழில் பயிற்சிகளை, பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு வழங்குகிறது. பயிற்சிக்கட்டணம் ரூ. 45 ஆயிரம். ஆனால், பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.

விண்ணப்பிக்கும் முறை

நேரில் அல்லது சுயவிவரக்குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இமெயில் மூலம் அனுப்பலாம். தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி விளக்கங்களைப் பெற்ற பிறகு விண்ணப்பம் செய்யலாம். கல்வித்தகுதிச் சான்றிதழ், வயதுச் சான்று, ஆதார் கார்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஓபிசி, பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்பதற்கான சான்று, நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றின் சுயசான்றொப்ப மிட்ட நகல்களுடன் அசல் சான்றுகளை மாணவர் சேர்க்கையின்போது சமர்ப்பிக்கவேண்டும்.

See Also

ஜூலை 7 ஆம் தேதி கிண்டி ஏடிடிசி அலுவலகம் மற்றும் எழூம்பூர் ஏடிடிசி அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும். ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்நுட்பம் டிப்ளமோ படிப்பில் 30 நபர்களும், தையல் மெஷின் ஆபரேட்டர் பயிற்சியில் 90 நபர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இமெயில் முகவரிகள்:
chennaig@atdcindia.co.in (Qsi), egmoresmart@atdcindia.co.in (எழும்பூர்)
தொடர்புக்கு: 9840416769 (கிண்டி), 9940340423 (எழும்பூர்)
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.6.2020

-சுந்தரபுத்தன்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top