Now Reading
ரொம்பநேரம் உட்கார்ந்தால் ரொம்ப கெட்டது!

ரொம்பநேரம் உட்கார்ந்தால் ரொம்ப கெட்டது!

நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவரா நீங்கள்? ஆபத்து, எழுந்திருங்கள்.

ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடம் வரை உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குபவர்களும்கூட தொடர்ந்து இருபது நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது பல நோய்களுக்கான வரவேற்பே என்கிறார்கள் மருத்துவர்கள். உட்கார்ந்தபடியே அதிக நேரம் புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பதும் அத்தனை கெடுதல். தூங்கும் நேரம் தவிர ஒரு நாளைக்கு 14, 15 மணி நேரத்திற்கு மேல் அதாவது 75 சதவீத நேரம் உடல் உழைப்பின்றி இருக்கிறோம். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேல் உடலின் செயல்பாடு குறைந்திருக்கிறது. எனவே உங்கள் பாதங்களுக்கு வேலை கொடுங்கள். செயலற்ற தன்மையால் உடலின் மெட்டபாலிசம் குறைந்துவிடும்.

நீங்கள் முதல் முயற்சியாக உடனடியாக செய்யவேண்டியது டிவி பார்த்தாலும் சரி, எழுத்து வேலையானாலும் சரி, கம்ப்யூட்டர் வேலையானாலும் சரி, இருபது நிமிடத்திற்கு மேல் ஒருபோதும் உட்கார்ந்திருக்காதீர்கள். உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்க உங்கள் பாதங்களை நகர்த்துங்கள். அதற்கு மனதையும் பழக்குங்கள். என்ன செய்யலாம்?

இருபது நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு நிமிடம் எழுந்து நடந்து சென்றுவிட்டு இருக்கைக்குத் திரும்பலாம்.

இருபது நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் மீட்டிங்காக இருந்தால் ஓரிரு நிமிடம் எழுந்து நின்று கொள்ளலாம்.

கைகால்களை நீட்டி, மடக்குவது உள்ளிட்ட சின்ன சின்ன பயிற்சிகளை இருக்கையில் இருந்தபடியே செய்வது நல்லது.

விரைவான விளையாட்டு, சிறு வொர்க் அவுட் ஆகியவை செய்துகொள்வது ரிஸ்க்கைக் குறைக்கும்.

See Also

அவ்வப்போது உடலுக்கு வேலை கொடுத்தாலே போதும்.

இதயப் பிரச்னைக்கான ரிஸ்க் குறையும்.

– தாரா

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

Scroll To Top